சென்னையில் இன்று முதல் 2வது தென்மண்டல இளையோர் ஹாக்கி

சென்னை: தென் மாநில அணிகளுக்கு இடையிலான 2வது தென் மண்டல இளையோர் ஹாக்கிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளாக நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா என 6 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் லீக் ஆட்டங்கள் இன்று முதல் அக்.23ம் தேதி வரை நடைபெறும். சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஆட்டங்கள் நடைபெறும். ஆடவர், மகளிர் என ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். இறுதி ஆட்டங்கள் அக்.24ம் தேதி நடைபெற உள்ளது. இப்படி தென் மண்டல இளையோர் ஹாக்கிப் போட்டி இந்த ஆண்டு மார்ச் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

அப்போது மகளிர் பிரிவில் முதல் 2 இடங்களை கர்நாடகா, தமிழ்நாடு அணிகளும், ஆடவர் பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகளும் பிடித்தன. தமிழ்நாடு, புதுச்சேரி ஆடவர், மகளிர் அணிகள் மோதும் ஆட்டங்கள் இன்று முதல் அக்.23ம் தேதி வரை தினமும் நடைபெறும். தமிழ்நாடு ஆடவர், மகளிர் அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் இன்று தெலுங்கானா ஆடவர், மகளிர் அணிகளுடன் மோத உள்ளன. அதே போல் புதுச்சேரி ஆடவர், மகளிர் அணிகள் தங்கள் முதல் ஆட்டங்களில் இன்று கர்நாடகா ஆடவர், மகளிர் அணிகளுடன் களம் காண உள்ளன.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது