சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை விட்டு விட்டு மழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக அலுவலகம் செல்வோர், மாணவர்கள் ஆகியோர் சற்று சிரமத்திற்கு உள்ளக்கியுள்ளனர்.

மழை காரணமாக மாநிலத்தில் இருக்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் நிரம்பி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை

மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூர் மக்களை மோடி ஏமாற்றிவிட்டாரா?.. முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி

9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காதலன் பேர் சொல்ல மறுப்பு: சிதம்பரம் அருகே பரபரப்பு