சென்னை தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளார் சஸ்பெண்ட்..!!

சென்னை: சென்னை தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளார் ஸ்ரீநிவாஸ் நாயக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுபோதையில் சட்டக்கல்லூரி மாணவியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நின்ற மாணவியிடம் ஸ்ரீநிவாஸ் தவறாக நடந்து கொண்டுள்ளார். தட்டிக் கேட்ட மாணவியின் நண்பர்களையும் ரயில்வே உதவி ஆய்வாளர் தாக்கியதில் ஒருவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்