சென்னையில் அறிவியல் கண்காட்சி: 24ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை: தமிழக அரசு ஆதரவுடன் சென்னையில் அறிவியல் கண்காட்சி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னையில் உள்ள அறிவியல் நகரம் முதன்மை செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும் அறிவியல் செய்முறை விளக்கங்கள், அறிவியல் லேசர் ஒளி, ஒலி காட்சி ஆகியன இடம் பெறுகின்றன.

சென்னை அறிவியல் விழாவை வருகிற 24ம் தேதி பகல் 1.30 மணி அளவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார். விழா 26ம் தேதி வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்காக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை