சென்னையில் இன்று இடியுடன் மழை பெய்யும்; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இன்று இடியுடன் மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் வரும் 27ம் தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதோடு, அவ்வப்போது கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. பருவமழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் அவ்வப்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஓரளவு ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

இதன் மூலம் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சென்னைவாசிகள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 23 முதல் 27ம் தேதி வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் வரும் 25ம்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 25ம்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை