சென்னை மழைநீர் வடிகால் பணி: மாநகராட்சியிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. 25 இடங்களில் சேதமடைந்த மழைநீர் வடிகால்களுக்கு மாற்று ஏற்பாடுகள் பற்றி மெட்ரோ நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளால் வடிகால் கட்டமைப்பு சேதமடைந்து, மழை நீர் வெளியேறும் கால்வாய்கள் மூடப்பட்டன.

சேதம் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி தொழிநுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று எற்பாடு செய்ய பரிந்துரை வழங்கியது. அனைத்து பணிகளையும் செப். 30-க்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. 25 இடங்களிலும் மழை நீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!

வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!!