சென்னை துறைமுகத்தில் அந்தரத்தில் தொங்கிய 40 அடி நீள கன்டெய்னர்: டிரைவர்கள் அலறல்

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் கன்டெய்னர் பெட்டிகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு டிரைலர் லாரி மூலம் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் துறைமுகத்தில் நேற்று காலை கன்டெய்னர் பெட்டகத்தை ராட்ச கிரேன் மூலம் தூக்கி டிரைலர் லாரியில் வைக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, 40 அடி நீள கன்டெய்னர் பெட்டி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

முறையான அனுபவம் இல்லாத ராட்சத கிரேன் ஆபரேட்டர்களை துறைமுக நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளதாகவும், இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் 20 அடி நீளமுள்ள கன்டெய்னர் பெட்டியை கையாளும்போது பொக்லைன் இயந்திரம் விபத்தில் சிக்கியது.

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டியை கையாளும்போது விபத்து ஏற்பட்டுள்ளதால் துறைமுக நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு முறையாக பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆபரேட்டர்களை பணியில் அமர்த்த வேண்டும். பெரும் விபத்துகள் ஏற்படும் முன்பு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது