சென்னையில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல்துறை பல நிபந்தனைகள் விதிப்பு

சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். அப்போது தி.நகரில் ‘ரோடு ஷோ’ நடைபெறுகிறது. அதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 நிபந்தனைகளுடன் பிரதமரின் ரோடு ஷோவுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது

பிரதமரின் ரோடு ஷோவுக்கு நிபந்தனைகள் என்னென்ன?

* பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என நிபந்தனை

* வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்ப தடை விதிப்பு

* பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை

* மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்ப தடை

* நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

* குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்

* பிரதமரின் ரோடு ஷோவில் பேனர், கட் அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது என கண்டிப்பு

* ரோடு ஷோவில் பங்கேற்பவர்கள் எந்த பதாகையையும் ஏந்திச் செல்லக்கூடாது

* அனுமதிக்கப்பட்ட பாதையில் ரோடு ஷோ மட்டுமே நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!!

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் இரவு பணி ! போதுமான ஓய்வு இல்லை ! விபத்துகள் அதிகரிப்பு : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி