சென்னை பெட்ரோலிய கழகத்தில் 73 இடங்கள்

1. Junior Engineering Assistant Trainee/Cat. 1 & 2:
i) Production (Trainee): 9 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
ii) Production (Cat/1). 19 இடங்கள் (பொது-7, எஸ்சி-4, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-1).
iii) Production (Cat.2). 4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1)
iv) Mechanical (Trainee): 5 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1)
v) Mechanical (Cat.1). 4 இடங்கள் (ெபாது-2, எஸ்சி-1, ஒபிசி-1).
vi) Mechanical (Cat.2). 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1)
vii) Electrical (Trainee): 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
viii) Electrical (Cat.1): 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1).
ix) Electrical (Cat.2): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
x) Instrumentation (Trainee): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
xi) Instrumentation (Cat.1): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1).
xii) P & U-Mechanical (Cat.1): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
xiii) P&U- Electrical (Cat.1): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).

தகுதி: Chemical/Petroleum/Petrochemical Engineering/Mechanical Engineering/Electrical/Electrical & Electronics Engineering/Instrumentation/Instrumentation & Electronics Instrumentation/Instrumentation & Control/Electronics & Communication ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், குறைந்தது 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Quality Control Analyst-IV (QC) Trainee: 3 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
3. Junior Technical Assistant- IV
i) F & S (Trainee): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
ii) F & S (Cat.1): 5 இடங்கள். (பொது-2, எஸ்சி-2, ஒபிசி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சப் ஆபீசர்ஸ் பயிற்சி, கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 01.02.2024 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.25,000-1,05,000.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உடல் திறன் தேர்வுக்கான தகுதி: உயரம்: 165 செ.மீ., எடை- 50 கிலோ, மார்பளவு: 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86.6 செ.மீ இருக்க வேண்டும். www.cpcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.02.2024.

Related posts

லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்