சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடி காணொலி வாயிலாக செப்.24ம் தேதி துவக்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாட்டில், சென்னை – மைசூரூ, சென்னை -கோயம்புத்தூர் என ஆகிய மார்க்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதையடுத்து 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், சென்னை -விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 652.49 கிலோமீட்டர் தூரத்தை 7.50 மணி நேரத்தில் நெல்லையை சென்றடைகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 83.30 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும். மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இதேபோல், சென்னை-விஜயவாடா இடையே அறிமுகப்படுத்தவுள்ள வந்தே பாரத் ரயிலானது மொத்தமுள்ள 516.66 கி.மீ தொலைவை 6.40 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77.49 கி,மீ வேகத்தில் செல்லும். இந்த ரயில் புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை-நெல்லை இடையே செப்.24ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து சென்னையில் இருந்து 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை பேசின்பிரிட்ஜில் இருந்து காட்பாடி வரை நேற்று வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.

Related posts

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு