சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை அடைந்தது ‘ஆனைமலை’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் ஆனைமலை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் மற்றும் கட்டம் நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II- 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2-ஆம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை (S98) வழித்தடம் 3-ல் (down line) 23.10.2023 அன்று அயனாவரம் நிலையத்திலிருந்து ஓட்டேரி நிலையத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. அயனாவரம் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 925 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொது ஆலோசகர்கள் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்