சென்னையில் ரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கான மோட்டார் கார் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான மற்றும் அலுவலக ஓட்டுனருக்கு தேர்வு நடத்தும் பொருட்டு ரூ.6.25கோடி மதிப்பில் 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டியங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி மன்றக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார்.

Related posts

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் பலி

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்