சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வழிகாட்டி பலகைகள்: சீரமைக்க வலியுறுத்தல்

புழல்: சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இருந்து செல்லும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டேரி, புழல் அம்பத்தூர் சந்திப்பு சாலை, செங்குன்றம் சாமியார் மடம் சந்திப்பு, திருவள்ளூர் கூட்டு சாலை, பாடியநல்லூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் ஓரங்களில் இரண்டு பக்கங்களிலும் வழிகாட்டிப் பலகைகள் கடந்த பல ஆண்டுகள் முன்பு, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக கனரக வாகன ஓட்டுநர்கள் வழிகாட்டி பலகைகளை பார்த்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்பு நடைபெற்ற வர்தா புயல் ஏற்பட்டபோது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் மரங்கள் வீடுகள் வழிகாட்டி பலகைகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் செல்லும் திசையில் ரெட்டேரி பகுதியில் உள்ள வழிகாட்டி பலகை, இதேபோல் சோழவரம் மார்க்கெட் செல்லும் பகுதி உள்பட பல பகுதிகளில் இருக்கும் வழிகாட்டி இரும்பு பலகைகள் உடைந்து உள்ளது. பெயர் பலகைகளில் இருந்த ஊர்களின் பெயர்கள் இல்லாமல் உள்ளதால் சென்னையில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளும், ஆந்திரா மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக கனரக வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்து உள்ள வழிகாட்டி பலகைகளில் ஊர் பெயர்களை அமைத்து சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து