சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!