சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீம் அஹமத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும் நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.  இதையடுத்து மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சமீம் அஹமத் நியமனத்தையும் சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 63 நீதிபதிகளாக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீதம் காலியாக உள்ள 12 நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை