சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. பெண்களுக்கு மட்டுமே பிடிக்கும் தங்கம் தற்போது ஆண்களுக்கு அதிகம் பிடிக்க துவங்கியுள்ளது, இதேபோல் பெண்களும் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க காயின் மற்றும் பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது. இது ஒருப்பக்கம் முதலீடாக இருந்தாலும் திருமணத்தின் போது லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்க இந்த யுக்தி பயன்படுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யபடுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யபடுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்