சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,870க்கும் சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.78.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கும் சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்