சென்னை ஐகோர்ட்டில் டைப்பிஸ்ட், ஜெராக்ஸ் ஆபரேட்டர்

பணியிடங்கள் விவரம்:

1. Typist: 22 இடங்கள். சம்பளம்: ரூ.19,500- 71,900. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆபீஸ் ஆட்டோமேஷனில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Telephone Operator: 1 இடம். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
3. Cashier: 2 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
4. Xerox Operator: 8 இடங்கள். சம்பளம்: ரூ.16,600- 60,800. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
5. Driver: 13 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் ₹18 முதல் 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி/ முஸ்லிம் பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பு 1.7.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.500/-. இதை இந்தியன் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, அருந்ததியர், எஸ்டி ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.02.2024.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!