சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக 8 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி.!

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் இதனால் பெரிதளவு பாதிக்கப்பட்டன . டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 1.35 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஜெர்மன் நாட்டின் பிராங்க் பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன் நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த லிப்ட்தான் ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரில் திரும்பி சென்றது. இன்று அதிகாலை 1:15 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதேப்போல் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடைத்தனர் இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பாங்காங் பிராங் பார்ட் பாரிஸ் ஆகிய மூன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அத்துடன் மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை