சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!: தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜூன் மாதம் சென்னையில் அதிக மழை பெய்தது குறித்து விளக்கம் அளித்த அவர்,

சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவு:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவு பொழிந்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் ஜூன் மாதத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இது இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகும். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூன் மாதத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இது 3-வது அதிகபட்ச மழை பதிவாகும். தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று கூறினார்.

3 நாட்களுக்கு மழை தொடரும்:

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 20, 21, 22-ம் தேதிகளில் மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்; சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது:

தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே சென்னையில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் 2 தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வழக்கு..!!

சென்னை – காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் இன்று சோதனை ஓட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு