சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.12% நீர் இருப்பு உள்ளது


சென்னை: சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம் வெளியாகியுள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 27 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,736 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 299 மில்லியன் கன அடியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.12% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.717 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 41.01%, புழல் – 82.91%, பூண்டி 1.95%, சோழவரம் 11.47%, கண்ணன்கோட்டை – 59.8% நீர் இருப்பு உள்ளது.

Related posts

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை

இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

நாட்றம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் மாட்டிற்கு வெடி வைத்து, கொட்டகைக்கு தீ வைப்பு