சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,695-க்கும், சவரன் ரூ.53,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6,695-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்தது நகை வாங்குவோரை சற்று நிம்மதி மூச்சி விட செய்துள்ளது.

Related posts

மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!