சென்னையில் ரூ.1000 கோடியில் பிரான்ஸ் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம்: 5000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: சென்னையில் ரூ. 1000 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை அமைக்க உள்ளதாக கேப்ஜெமினி (Capgemini) நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இதனால் நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐடி சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி (Capgemini), சென்னையில் புதிய கேம்பஸ் ஒன்றை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப்ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கவுள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்ட வளாகம் கட்டப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக செலவிட உறுதி அளித்துள்ளது.

Related posts

`ஸ்பெஷல் ஃப்ளேவர்’ எனக்கூறி விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை: 2 பேர் அதிரடி கைது

2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்! ஒரே நாளில் 356 திருமணங்கள்..