சென்னை ரசிகர்களின் ஆதரவு உற்சாகமளிக்கிறது…

நான் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 9 மாதங்களில் மனநிறைவு கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகம் முழுவதும் இளம் வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக கிடைக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்காக இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஹாக்கி விளையாடும் நாடுகளின் சங்கங்கள் உடன் இணைந்து செயல்பட உள்ளோம். கூடவே ஹாக்கி என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒற்றுமை, மனிதத்தின் நுழைவு வாயில். ஆடவர், மகளிர் என் இரண்டு தரப்புக்கும் திறன்களை மேம்படுத்த, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உள்ளோம். ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டைகள் மரத்தினால் செய்யப்பட்டவை. அதனால் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க “வனங்களுக்கு மறுபடியும் வழங்குகிறோம்” என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்குகிறோம்.

சுமார் 1000 மரக்கன்றுகளை நட உள்ளோம். இதனை மற்ற நாடுகளிலும் தொடருவோம். செயற்கை இழை களத்தில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க நாடுகளின் காலநிலை உட்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. கிரிக்கெட்டை போல ஆண்டு முழுவதும் தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலிப்போம். ஹாக்கி விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முன்பாக, கூட்டமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளை நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. சென்னையில் கட்டாயம் மறுபடியும் சர்வதேச போட்டிகள் நடைபெறும். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சர்வதேச போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நடைபெறும் ஆட்டங்களைக் காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் வருவது உற்சாகம் அளிக்கிறது. சென்னை ரசிகர்களின் ஆதரவு அபாரம். – எப்.ஐ.எச் தலைவர் முகம்மது இக்ரம்

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது