சென்னை நுழைவுத்தேர்வு மையத்தில் விஐடி பல்கலை துணைத்தலைவர் ஆய்வு

சென்னை: சென்னை விஐடி பல்கலை தேர்வு மையத்தில் நடந்து வரும் இளங்கலை பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு மையத்தினை, பல்கலை துணை தலைவர் சேகர் விசுவநாதன் நேற்று ஆய்வு செய்தார். விஐடி பல்கலைக்கழக குழும நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புக்கான (பி.டெக்) நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. 2023-2024ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவு தேர்வு 17.4.2023 அன்று துவங்கி 23.4.2023 அன்று நிறைவடைகிறது. விஐடி சென்னையில் பி.டெக் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட 15 பி.டெக் படிப்புகள் உள்ளன. விஐடி சென்னை வளாகத்தில் நுழைவு தேர்வினை சுமார் 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். விஐடி சென்னை வளாகத்தில் 17.4.2023 அன்று காலை தேர்வு மையத்தினை விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, விஐடியின் இணை துணைவேந்தர் முனைவர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், துணை இயக்குனர் (மாணவர் சேர்க்கை) முனைவர் பழனிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வினை எழுதினர்.

Related posts

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை