சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.05% நீர் இருப்பு

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 62 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 50 கன அடியாக குறைந்தது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,811 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 120 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 312 மில்லியன் கன அடியாக உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 500 கனஅடி நீர்வரத்து உள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1513 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒரே நாள் இரவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 31 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 40.05% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.709 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் -41.51%, புழல் – 79.12%, பூண்டி – 4.73%, சோழவரம்- 11.1%, கண்ணன்கோட்டை -62.4% நீர் இருப்பு உள்ளது.

 

Related posts

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்