சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.25% நீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.25% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 224 கன அடியாக உள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 86 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 306 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.25% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4.380 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 38.41%, បុប្ផាសំ 75.12%, 9-3.37, சோழவரம் 7.95%, கண்ணன்கோட்டை – 61.2% நீர்இருப்பு உள்ளது.

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்