சென்னையை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணருக்கு சிறந்த மருத்துவர் விருது

சென்னை: தேசிய அளவிலான சிறந்த மருத்துவர் என்ற விருது சென்னையைச் சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் தினேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் மார்ச் 30ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்ற போதிலும் இந்தியாவில் மட்டும்தான் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நம்பிக்கையூட்டும் சிறந்த தோல் சிகிச்சைக்கான நிபுணர் விருது சென்னையைச் சேர்ந்த பிரபல தோல் சிகிச்சை நிபுணர் டி.தினேஷுக்கு வழங்கப்பட்டது.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை