சென்னை, டெல்லி உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: சென்னை, டெல்லி உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ராம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி மன்மோகன், அங்கேயே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ராஜீவ் ஷக்தேர், இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி இந்திர பிரசன்னா முகர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தஷி ரப்ஸ்தான், அங்கேயே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைத், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டுள்ளார்.

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்