சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தின் அவசரகால கதவை, பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 159 பயணிகள் புறப்பட்டனர்.அப்போது விமானி, விமானத்தை ஓடு பாதையில் இயக்குவதற்கு தயாரானார். அந்த நேரத்தில் திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறக்கும்போது ஒலிக்கக்கூடிய அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, அவசரகால கதவை திறந்தது யார் என விசாரிக்க தொடங்கினர். கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணியிடம் விசாரித்தனர். அவர், நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டனை அழுத்தவில்லை.

அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால் தெரியாமல் அழுத்தி விட்டேன். உடனே அலாரம் ஒலித்து விட்டது. முதல்முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார். உடனே பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக, இரவு 8 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றது. அந்த பயணியை, விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சரோஸ் (27), சென்னையில் வேலைக்கான இண்டர்வியூக்கு ரயிலில் வந்து, விமானத்தில் திரும்பி செல்ல இருந்ததும் தெரிந்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்