சென்னையில் தொடர் மழையால் 37 விமானங்கள் தாமதம்

சென்னை: மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான முனையங்களில் நேற்று அதிகாலையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், சுமார் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், பாங்காக், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட 15 சர்வதேச விமானங்கள் மற்றும் மும்பை, டெல்லி, ஐதராபாத், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 37 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதத்திற்கு முக்கிய காரணம், மழையால் பயணிகள் தாமதமாக வருவதுதான்.எனவே, உள்நாட்டுப் பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவும் வந்தால் தாமதத்தை தவிர்க்கலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது