சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி..!!

சென்னை: சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்பிரிவு வழக்கு ரத்துசெய்யப்பட்டு விட்டால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஓஷன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்