சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.07.2024 முதல் 06.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!