சென்னை பஸ், லாரி மீது மோதி விபத்து: 10 பேர் படுகாயம்

ஆம்பூர்: கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை சென்ற பஸ், லாரி மீது மோதியது. இதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு அதிகாலை 2 மணியளவில் வந்தது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் வழியாக சென்னைக்கு புறப்பட்டது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியை கடந்தபோது முன்னால் வேலூர் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராமல் அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

மாணவியிடம் சில்மிஷம் அரசு டாக்டர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்