47வது சென்னை புத்தக காட்சி: மழை பெய்தாலும் புத்தகம் வாங்க வாசகர்கள் ஆர்வம்

சென்னை: சென்னையில் மழை பெய்தாலும் புத்தக காட்சிக்கு வந்து புத்தகங்களை வாசகர்கள் ஆர்வமாக வாங்கினர். 47வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.3ம் தேதி தொடங்கியது. அனைத்து விதமான தலைப்புகளிலும் பல்வேறு பதிப்பங்களின் புத்தகங்கள் இடம்பெற்று உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலேயே இருந்து விட்டனர். எனினும் புத்தக பிரியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.

மேலும் இந்த புத்தக காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்தின் புத்தக அரங்கு எஃப் 29 என்ற எண்ணில் அமைந்துள்ளது. இந்த அரங்கில் கற்பித்தல் என்னும் கலை, வெளித்தெரியா வேர்கள், உணவே மருந்து, தமிழ்நாட்டு நீதிமான்கள், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் உள்ளன. மேலும் 164சி அரங்கில் தினகரன் நாளிதழின் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தினகரன் நாளிதழில் இருந்து வெளியிடப்படும் குங்குமம், தோழி, டாக்டர், தினகரன் ஆன்மிகம், விவசாயம், கிச்சன் ஆகிய இதழ்கள் உள்ளன.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி