இன்று காலை முதல் மாலை வரை சென்னை கடற்கரை -தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை முதல் மாலை வரை சென்னை கடற்கரை-தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, காலை 10.30, 10.40 10.50 11.10 11.20, 11.30, 11.40 மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30 மற்றும் மதியம் 2, 2.30, மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், காலை 11, 11.50 மற்றும் மதியம் 12.30 12.50, 1.35, 2.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, மற்றும் 2.15, மற்றும் மாலை 4.30 தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 9.40, 10.55, 11.5, 11.30 மற்றும் மதியம் 12, 1, ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை காலை 11.55, 12.45, மற்றும் மதியம் 1.35, 1.45 1.55 மற்றும் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, 9.30, 10.55, 11.5 மற்றும் 11.30, 12, 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க இவ்வழித்தடத்தில் கூடுதல் சேவைகளை இயக்க போக்குவரத்து கழகத்திடமும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் கூடுதல் சேவைகளை இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 22ம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னையில் இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கம்
தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று (18ம் தேதி) நடைபெற உள்ளது.

இதனால் தெற்கு ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 வரை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி போக்குவரத்து கழகம் காலை 10 மணி முதல் மாலை 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இன்று இயக்க உள்ளது.

மேலும், 17ம் தேதி (நேற்று) முதல் 22ம் தேதி வரை தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 வரை ரத்து செய்துள்ளது. இந்த நேரத்தில் பயணிகள் நலன் கருதி போக்குவரத்து கழகம் இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 வரை அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் தேவை 50ஆயிரம் ஊழியர்களுக்கு 10 நாள் கட்டாய விடுப்பு: சூரத் வைர நிறுவனம் அறிவிப்பு

இந்தியா கூட்டணி இந்த வாரம் சந்திப்பு

மணல் குவாரி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்