சென்னை விமானநிலையத்தில் 30 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம்; வடமாநிலங்களில் மோசமான வானிலை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து இன்று காலை முதல் லண்டன், மஸ்கட், துபாய், அபுதாபி, கோலாலம்பூர், இலங்கை விமானங்கள் மற்றும் உள்நாட்டு முனையத்தில் இருந்து அயோத்தி, டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், ராய்ப்பூர், கோவா, கோவை என மொத்தம் 15 விமானங்களின் புறப்பாடு சேவையும் அதேபோல் 15 விமானங்களின் வருகை சுமார் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலங்களில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக விமானங்கள் தாமதமாக சென்னைக்கு வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்றார்.இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து இன்று மதியம் 12.50 மணியளவில் அயோத்திக்கு புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் பிற்பகல் 2.35 மணியளவில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், இன்று ஒரே நாளில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் வருகை, புறப்பாடு என மொத்தம் 30 விமானங்களின் சேவைகள் தாமதமாகி வருகின்றன.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!