சென்னையில் 106 டிகிரி வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் நீடித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள அதிதீவிரப் புயலின் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, அதிக வெப்பம் மற்றும் வெயில் தாக்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் 106 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது. அதேபோல தர்மபுரி, மதுரை, தூத்துக்குடி, திருப்பத்தூரில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சில இடங்களில் இயல்பைவிட குறைந்தும் காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 18ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்