சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும்: தனியார் வானிலை ஆர்வலர்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும். கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மற்றும் நெல்லை மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும். சராசரியாக 15 செ.மீ. அளவிலும் மிக கனமழையின்போது 25 செ.மீ. அளவிலும் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

எண்ணூரில் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான 11 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இரவு நேரத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Related posts

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்

சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை