சென்னையில் இருந்து திருப்பதிக்கு விரைவில் வந்தேபாரத் ரயில் விரைவில் இயக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே மூன்றாவது வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து கோவை, மைசூருக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து சென்னையில் இருந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கோரக்பூரில் இருந்து லக்னோ, சென்னையில் இருந்து திருப்பதி மட்டும் ஜோத்பூர் செல்லும் சமர்மதி செல்லும் மூன்று வந்தே பாரத் ரயில்கள் ஜூலை 7-ம் தேதி இயக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் சென்னை-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகார பூர்வ ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் ஒப்புதல் கிடைத்தவுடன் கால அட்டவணை, பயண நேரம், பயண கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு