சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஒரே நாளில் 3 மடங்கு அதிகரிப்பு..!!

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஒரே நாளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர் இருப்பு 3,138 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் தற்போது 22.07 அடி உயர்ந்துள்ளது. ஏரியில் இருந்து குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 162 கனஅடியில் இருந்து 451 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்தது.

Related posts

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது