சென்னை சவுகார்பேட்டையில் 6 நகைக்கடைகளில் 2வது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு முக்கிய ஆவணம், பணம் சிக்கியது

தண்டையார்பேட்டை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள 6 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விற்பனை செய்யப்படுவதில் 2வது விற்பனை நகரமாக சென்னை சவுகார்பேட்டை விளங்குகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 500க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகைக்கடை மற்றும் பட்டறை உரிமையாளர்கள் வரிஏய்ப்பு செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலை, வீரப்பன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 6 நகைக்கடைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. சவுகார்பேட்டையில் 6 நகைக்கடைகளில் அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி
இதேபோல் திருச்சி ெபரிய கடைவீதி, சின்ன கடை வீதியில் குறிப்பிட்ட 4 கடைகளில் நேற்றிரவு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் 23 பேர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனை இன்றும் தொடர்கிறது.உரிமையாளர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தங்க கட்டிகளாக வாங்கி விற்பனை செய்ததில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா