சென்னையில் ஒரு வார சோதனை குட்கா விற்ற 72 பேர் கைது

சென்னை, பிப்.27: தமிழ்நாடு அரசு தடை செய்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் உத்தரவுப்படி போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 7 நாட்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாக 63 வழக்குகள் பதிவு செய்து, வியாபாரிகள் உட்பட 72 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 59.5 கிலோ குட்கா பொருட்கள், 31.9 கிலோ மாவா, ரூ.13,450 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

பால் கடையில் குட்கா விற்றவர் கைது: திருவிக நகர் பகுதியில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக செம்பியம் உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் திருவிக நகர் எஸ்ஆர்பி கோயில் தெருவில் உள்ள பால் கடையை சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த கடையிலிருந்து 3 பெட்டிகளில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையை நடத்தி வந்த திருவிக நகர் கே.சி.கார்டன் 2வது தெருவை சேர்ந்த சோலை செல்வம் (36) என்பவரை கைது செய்தனர். இவர் செங்குன்றம் பகுதியில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி பால் கடையில் வைத்து தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சோலை செல்வம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4