சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: காவல்துறை

சென்னை: சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவெற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 16,500 போலீசார், 2,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
* அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.
* அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.
* சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகர எல்லையில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 15-ல் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

‘வடதிருநள்ளாறு’ என்று அழைக்கப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு