சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் மீன் கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்..!!

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் அமைந்துள்ள மீன் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.9 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது. மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கலினால் கடந்த சில மாதங்களாக மீன் அங்காடி செயல்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கடைசி நாளாக கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இன்றிலிருந்து மீன் அங்காடியை செயல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பட்டினம்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை கடைகள் அமைப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உயர்நீதிமன்ற உத்தரவுபடி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன் அங்காடி செயல்படுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related posts

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தாமதம் ஏன்? -காங்.

ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சாம்சங் போராட்டம்; உடன்பாடு ஏற்படுமா?.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை!