சென்னை பரங்கிமலை வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்கள் ரத்து

சென்னை: சென்னை பரங்கிமலை வழிதடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான இரவு நேர புறநகர் ரயில்கள் நாளை முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 10.40, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு செல்ல கூடிய புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.40, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட கூடிய செங்கல்பட்டு புறநகர் ரயிலும் முற்றிலுமாக ரத்து செய்யபடுகிறது.

அதே போல மறுமார்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களிலும், செங்கல்பட்டிலிருந்து 10.10 மணிக்கு புறபட்டு சென்னை கடற்கரைக்கு வரக்கூடிய புறநகர் ரயில்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதே போல 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையும், எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. எழும்பூரில் இருந்து இரவு 10.55-க்கு புறப்படக்கூடிய மன்னார்குடிக்கு செல்ல கூடிய எக்ஸ்பிரஸ் (16179) ரயிலானது பகுதியாக எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் நாளை முதல் 3-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 11.15 மணிக்கு புறப்படக்கூடிய நங்கலூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படிகிறது. அதே போல் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லக்கூடிய ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை முதல் 3-ம் தேதி வரையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வரையில் பகுதியாக ரத்து செய்யப்ப்டுகிறது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்