சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் அனுமதி இல்லை.. கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவு..!!

சென்னை: சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் 2023 டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை என்பதால் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டது. இதர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுவதற்கு அரசு அளித்த கால அவகாசம் இன்று முடிவடைகிறது. இந்நிலையில், இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “24.01.2024 இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. ஏற்றாற்போல் ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி