சென்னை மாநகராட்சியின் புதிய முன்னெடுப்பு: பேரிடர் நிவாரண பணியில் ட்ரோன்களை களமிறக்க முடிவு

சென்னை: சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரிடர் நிவாரண பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இன்றைய அறிவியல் யுகம் ட்ரோன் யுகமாக மாறி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. திருமண விழாக்கள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள் இன்று ராணுவம், வேளாண்மை, உள்ளாட்சி அமைப்பு மருத்துவம், திரைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன. வரும் காலங்களில் ட்ரோன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ட்ரோன் தொழில்நுட்பத்தின் கேந்திரமாக சென்னையை மாற்றுவதற்கான பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு சேவைகளை கண்காணிக்கவும், மாநகராட்சியின் சேவைகளை மேம்படுத்தவும் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையன் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கடற்கரை கண்காணிப்பு, கால்வாய்களை தூர்வாருதலை கண்காணித்தல், நிவாரணப்பணிகள், பேரிடர் காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லுதல், மனிதர்களால் செல்ல முடியாத பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது, குப்பை கொட்டும் இடங்களை கனண்காணிப்பது போன்ற பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக டரோன் இயக்குவோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்த குமரகுருபரன் அதற்காக டெண்டர் கோரப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!