சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி காரணமாக OMR சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் கட்டுமான பணி காரணமாக OMR சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளதாக போக்குவரத்துகாவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணியினை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 30.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் YMCA முன்பு புதிய “U” திருப்பம் செய்து, SRP சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி