சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை; ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,545-க்கும் விற்பனை

சென்னை: தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

பெண்களுக்கு மட்டுமே பிடிக்கும் தங்கம் தற்போது ஆண்களுக்கு அதிகம் பிடிக்க துவங்கியுள்ளது, இதேபோல் பெண்களும் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க காயின் மற்றும் பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது. இது ஒருப்பக்கம் முதலீடாக இருந்தாலும் திருமணத்தின் போது லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்க இந்த யுக்தி பயன்படுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,545-க்கும், சவரன் ரூ.44,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.79-க்கு விற்பனையாகிறது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு